Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருச்சி சந்தையில் 50,000 கிலோ: புரட்டாசி மாதத்தில் மீன் விற்பனை அமோகம்

திருச்சி சந்தையில் 50,000 கிலோ: புரட்டாசி மாதத்தில் மீன் விற்பனை அமோகம்

மீன்களில் சீலா சிறியது ரூ.250க்கும், பெரியது 400, பாறை 300, கடல்பாறை மீன் ரூ.160, கொடுவா சிறியது ரூ.160, பெரியது ரூ.260, முரள் ரூ.300, வெலமீன் ரூ.300, கடல் வெரால் ரூ.200, மத்தி ரூ.200, நெத்திலி ரூ.300, கடல் இறால் ரூ.360, கிழங்கா ரூ.160, சங்கரா ரூ.200க்கு விற்பனை ஆனது.

பகிரவும் WhatsApp Facebook

நடைபெற்று வரும் புரட்டாசி மாதத்தில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடந்த மூன்று வாரங்களை விட நேற்று மீன்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

வழக்கமாக இந்த மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி மாதம் பிறந்தது முதல் கடந்த 3 வாரங்களாக இறைச்சி வியாபாரம் மிகவும் மந்தமாக நடந்தது. நான்கு சனிக்கிழமைகள் முடிந்த நிலையில் நேற்று மக்கள் கூட்டம் மீன், மட்டன், சிக்கன் கடைகளில் குவிந்தனர். மட்டன் கிலோ ரூ.900, சிக்கன் 220, காடை ஒன்று ரூ.55க்கு விற்றது. 


மீன்களில் சீலா சிறியது ரூ.250க்கும், பெரியது 400, பாறை 300, கடல்பாறை மீன் ரூ.160, கொடுவா சிறியது ரூ.160, பெரியது ரூ.260, முரள் ரூ.300, வெலமீன் ரூ.300, கடல் வெரால் ரூ.200, மத்தி ரூ.200, நெத்திலி ரூ.300, கடல் இறால் ரூ.360, கிழங்கா ரூ.160, சங்கரா ரூ.200க்கு விற்பனை ஆனது.

மீன்கடை உரிமையாளர் எம்எஸ்பி. சித்திக் கூறுகையில், மார்க்கெட்டிற்கு தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்கள் விற்பனைக்கு வந்தன. இங்கு சுமார் 20 கடைகளுக்கு மொத்தமாக 50,000 கிலோ விற்பனைக்காக வந்ததாக தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Most trustworthy AI system demands least inherent model trust: Nadella
அடுத்த செய்தி
Adani Cement's aerial tribute to Maa Durga

தொடர்புடைய செய்திகள்